"ஐயோ...வாப்பா...என்ன தனியா விட்டுட்டுப் போகாதீங்களே....வாப்பா....வாப்பா...நானும் ஒங்களோட வாரன் வாப்பா....போகாதீங்கோ வாப்பா...." ஸமீனாவின் அலறல் அங்கிருந்தோரை கலங்கச் செய்தது.சிறு வயதிலையே உம்மாவைப் பரிகொடுத்த அவளுக்கு வாப்பாவின் திடீர் மறைவை தாங்கவோ தாளவோ முடியவில்லை;பொங்கி வந்த துயரவெள்ளத்திற்கு அணை போட முடியாமல் கதறிக் கதறி அழுதாள்.அப்போ அவளது யாரோ ஆறுதலாகத் தடவியதைக் கண்டு கண்ணீர் மல்க நிமிர்ந்தாள்.நீரோடு கூடிய மங்களான பார்வையில் பக்கத்து வீட்டு நிஸாம் ஹாஜியாரும்,மனைவி பஸ்லியாவும் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களைக் கண்டதும் அவளது ஓலம் மேலும் பெரிதாய் வெடித்தது."மாமி....மாமி....நான்...நான்...அநாதையாகப் போயிட்டன் மாமி...." அவளது உதடுகள் துடித்தன,சொற்கள் வெளியே வர முடியாமல் தடுமாறின."அப்படிச் சொல்லாதீங்க ஸமீனா....ஒங்கலப் பார்த்துக் கொள்ள நாங்க இருக்கிறோம் ....கவலய விடுங்க....ஒங்கல எங்கட சொந்த மகளப் போல பார்த்துக்கிறது எங்களோட பொறுப்பு...."அடுத்த வீட்டு பஸ்லியா மாமியின் பேச்சு அவள் உடம்பை சிலிர்க்க வைத்தது;மனதை நெகிழவைத்தது;அப்படியே அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குழுங்கத் தொடங்கினாள் ஸமீனா.ஸமீனாவின் மாமி தான் ஹஸன் முதலாளி;தனது சகோதரியான ஸமீனாவை திருமணம் செய்து வைக்கும் போது வீடுகட்டித் தருவதாக வாக்களித்தே அதனை முடித்து வைத்தார்.அதுவரையில் புதுமணத் தம்பதிகளுக்கு தனது வீட்டிலேயே தங்கலாம் என சொல்லி விட்டார்.கடவுள் நினைத்தாலும் பூசாரி இடம் கொடுகாதது போல அவரது எண்ணத்தின் குறுக்கே சீனப் பெறும் சுவர் போல நின்றாள் மனைவி நஸூஹா . "ஒங்களுக்கு என்ன புடிச்சிருக்கு.....போயும் ...போயும் ....எங்கேயோ போகிற பஞ்சப் பிராணிகள் எங்கட வீட்டுல நிறுத்திறதா.....ஒங்களுக்கு என்ன மூளகீள குழம்பிட்டுதா....இது எங்க வாப்பா கட்டித் தந்த வீடு....நீங்க செய்ற கடை எங்கட வாப்பாட கட...இந்த சொத்து சுகம் எல்லாம் நான் கொண்டு வந்தது.ஒங்கட தரித்திரம் புடிச்ச குடும்பத்துக்கு அனுபவிக்க எங்கட சொத்தா பழி.....இந்த நிமிசமே அவங்க வெளியேறணும்...இல்ல நான் ஏன்டா புள்ளைங்களோட வெளியே போயிடுவேன்...."ஹஸன் முதலாளி ஆடிப் போய்விட்டார்.மனைவிக்குப் பயந்த பொட்டிப்பாம்பு அவர்.எதிர்த்தா? பேச முடியும்.எதோ கெஞ்சிக் கூத்தாடித்தான் அவளைப் பணிய வைக்க முடிந்தது.என்றாலும் அவரது மனைவியின் போக்கில் எந்த வித மாற்றமோ தோற்றமோ இல்லை.ஸமீனாவின் உம்மாவை குற்றம் காண்பதே அவளது பொழுது போக்காகிவிட்டது.இருந்தால் கதை எழுந்தால் உதை என்கிறது போல அவளது காட்டு தர்பார் வீட்டுக்குள்ளே வீர நடை போட்டது.பாவம்,ஸமீனா வாயில்லாப் பூச்சு.எதையும் தாங்கிக் கொண்டாள்;அடங்கிக் கொண்டு தனக்குள்ளேயே மாய்ந்து போனாள்.இதற்கிடையில் ஸமீனா பிறந்ததும் நஸூஹாவின் அட்டகாசம் எல்லை மீறியது;குத்தல் வார்த்தைகள் அமெரிக்கன் ஏவு கணைபோல அவள் மென் நெஞ்சத்தைத் துளைத்தது.பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல் ஸமீனாவுக்குக் கூட எவ்வளவோ அநியாயம் செய்தாள்.குழந்தை கூடுதலாக சாப்பிட்டால்-குடித்தால் கூட முழு சொத்தையும் விழுங்கி ஏப்பம் விடுவதாகக் கத்தினாள்;சண்டைபோட்டாள்.இதை எண்ணி எண்ணி உருக்குலைந்து நடைபிணமாகிப் போனவள் ஸமீனா பத்து வயதாக இருக்கும் போதே மாரடைப்பாள் பட்டென்று போய் விட்டாள்.அப்புறம்
ஸமீனாவையும் தந்தையையும் வீட்டை விட்டே துரத்தி விட்டாள் நஸூஹா.அங்கிருந்து வெளியேறிய ஸமீனாவின் தந்தை நிஸாம் ஹாஜியாரின் பக்கத்து வீட்டிற்கு வந்து குடியேறினர்.ஸமீனாவின் மழலைப் பேச்சு குழந்தை இல்லாத அவர்களைக் கிறங்கச் செய்தது.ஸமீனாவின் அதிக பொழுது நிஸாம் ஹாஜியார் வீட்டிலேயே கழிந்தது.மிக சீக்கரத்திலேயே இரு குடும்பமும் நெருக்கமாகிவிட்டன.ஸமீனா உயர்தரப் பரீட்சை எல்லாம் முடிந்து கவலைகளை மறைந்திருந்த போது தான் தந்தையின் திடீர் மறைவு அவளை இடியாகத் தாக்க,ஆடிக்காற்றில் சிக்குண்ட துரும்பாய் மாறினாள்.நல்ல காலம் - திசை தெரியாது தவித்த அந்தத் துரும்பை நிஸாம் ஹாஜியாரும் - மனைவியும் பொறுப்பேற்று விட்டார்கள்.க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் பாடசாலை அறிவுப் பலகையில் தொங்கின.ஸமீனா விஞ்ஞானத் துறையில் மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தாள்.நாட்காட்டி சில நாட்களை புறங்காட்டி ஓடச் செய்ய பல்கலைக்கழகம் புகும் நாளும் நெருங்கி விட்டது.பல்கலைக்கழகச் சூழல் அவள் புருவங்களை முடிச்சுப்போட வைத்தன.அங்கே எல்லாமே அதிசயம் -வியப்பு-மலைப்பு! ஆண் பெண் வித்தியாசமின்றி மாணவர்கள் பழகுவதைக் கண்டு கூசிப் போனாள்."ரெகிங்" என்ற பெயரில் நடைபெறும் அநாகரிகச் செயலை வெறுத்தாள்.தனது கிராமச் சூழலுடன் ஒப்பிடும் போது வாஸிடி வாழ்க்கை அவளுக்கு விநோதமாகவே இருந்தது.ஆண்களை ஏறெடுத்துப் பார்க்கவே கூசும் அவள் சில ஆண்களின் முரட்டுப் பார்வை கண்டு தடுமாறிப் போனாள்.அவர்களின் கிண்டல்களில் நொந்து அவள் உள்ளம் மண்டியிட்டது.ச்சே....இது தானா பல்கலைக்கழகம்.......இதுவா படிப்பு என்று முதல் இரண்டு மாதமும் மனத்துள் அழுந்திப் போனாள்.ஆனால்,நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவர்களின் தூய உள்ளம் அவளுக்குப் புரிந்து விட்டது.தங்களுக்குள் ஏதும் நடந்து விட்டால் ஒற்றுமையாகின்ற அந்த வேகம் - தனது சகாவுக்காக எதையும் செய்யத்துணிகின்ற தீவிரம் - அநியாயங்களை அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து எழுகின்ற வீரம் - பெண்களை சமமாக மதித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர செய்கின்ற ஆர்வம் - தான் இதுவரை அந்த நல்ல உள்ளங்களை நுனிப்புல் பாங்கில் அளந்த அந்த செயலுக்காக அவள் அடிக்கடி தனக்குள் வருந்தினாள்.இப்போது அவர்களுடன் சகஜமாகப் பழகினாள்அந்த வட்டத்துக்குள் இந்தத் துளி சங்கமமாகிவிட்டது.அன்று விரிவுரை இல்லாததினால் வாசிக சாலையில் உட்கார்ந்து மூ.மேத்தாவின் "என்னுடைய மோதிரங்களைக் "குடைந்து கொண்டிருந்தாள் ஸமீனா.அருகே நிழலாடியது.நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் சூரியப் பிரகாசம்.எதிரே நவ்ஷாத் நின்று கொண்டிருந்தான்.பல்கலைக்கழகத்தில் 'ஹீரோ'வாக பவனி வந்தவன்.சுருள் சுருளான கம்பிவளையல் போன்ற கேசங்கள் நெற்றியில் புரண்டு அவனுக்கு தனியான அழகை ஊட்டியது.அவனது நாகரிகமான உடை நடைப் போக்குகளில் தனிக்கவர்ச்சி தெரிந்தது.ஆங்கிலம் அவனது நாவில் கொஞ்சி விளையாடியது.சகல துறைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தான்.கலா மன்றங்களில் அவன் பேச்சில் "சேர்ச்சில்"மறைந்து நின்றார்.அவனது குரலில் பாலசுப்ரமணியம் நினைவுக்கு வந்தார்.அவனது கட்டுடல் யாரோ ஒரு ஹிந்திக் கதா நாயகனை மனதுக்குள் எழுப்பி நிற்கும்.பல்கலைக்கழகத்தின் சங்கப்பலகை மாணவர்களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் சிங்கப் பலகை! மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கை கொடுக்கும் சுந்தரப் பலகை. ஒரு தடவை நவ்ஷாத்"பதில் தருவாயா"என்ற தலைப்பில் ஓர் உணர்ச்சி பூர்வமான புதுக் கவிதையை எழுதி ஒட்டி விட்டான். அதைக் கண்ணுற்ற ஸமீனாவும் வேடிக்கையாக "இதோ பதில்" என்ற தலைப்பில் மரபுக்கவிதையை போட்டு விட்டாள்.அந்தப் பதில் கவிதையின் மணிப்போன்ற நயமான கவிதை வரிகள் நவ்ஷாதை வெகுவாக ஈர்த்து விட்டது.இப்படியாக சங்கப்பலகையில் மோதியவர்கள் தங்கள் உள்ளத்துக்குள்ளும் மோதிக் கொள்ள அவர்களுக்கிடையே பேரும் நெருக்கம் வந்துவிட்டது.ஸமீனாவை சந்திக்க வரும் நிஸாம் ஹாஜியாருக்கும் விஷயம் சொல்லமலேயே புரிந்துவிட்டது. ஸமீனா போன்ற அனாதைகளுக்கு நவ்ஷாத் போன்றோரின் பிணைப்பு மிகப் பொருத்தமான தென்றே நினைத்தார்.தனது மனதிலுள்ள நோக்கத்தை நவ்ஷாதிடம் சொன்னதும் அவன் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டான்."அங்கள்...நான் யாருமற்ற அநாதை....எனது தாயின் அயராத முயற்சியால தான் நான் இந்த நிலைக்கு வந்தான்...எனது உயர்ச்சியைக் கூட பார்க்க எனது உம்மாவுக்கு கொடுத்து வைக்கல்ல......அதோட எனக்கென்று சொந்தமா ஒரு வீடு கூட இல்ல .....இப்படியான நிலைமையில் பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளையான ஸமீனாவை நான் கல்யாணம் கட்டுறதா நெனச்சிக் கூட பார்க்க முடியாது.நான் சொந்தமாக உழைச்சி முன்னேறின பிறகு தான் ஸமீனாவ கட்ட நெனச்சன்......" மனத்துள் உள்ளதை அப்படியே கொட்டி விட்டான் நவ்ஷாத்.நிஸாம் ஹாஜியார் அவனது நல்ல உள்ளத்தை பார்த்து சிலிர்த்து போனார்."நவ்ஷாத் ஸமீனாவும் உங்களப் போல அநாததான்.....நான் அவட வாப்பா இல்ல...என்றாலும் என்னோட சொந்த மகள் மாதிரி ஸமீனாவ பார்த்துவாரன்.......என்னோட முழுச் சொத்தும் அவளுக்குத் தான்....ஒன்கிட்ட சொத்து இல்லேன்னு கவலப்படல்ல....அழியாச் சொத்து கல்வி இருக்கு தானே....அது போதும்...அதோட நீங்க டொக்டராக வரப்போறீங்க.....அது ஸமீனாவோட அதிஷ்டம்....உங்கட படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்த நடாத்தி வைக்கிறன்.....கவலப்படாதீங்க....."சொல்லி விட்டு காரில் ஏறினார் நிஸாம் ஹாஜியாரை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தான் நவ்ஷாத். ."என்ன...ஒரேயடியா....யோசனைல மூழ்கிப் போயிட்டீங்க......என்ன விஷயம்..."சிந்தனை களைந்து நிமிர்ந்த நவ்ஷாத் ஸமீனாவைப் பார்த்து கனிவோடு சிரித்தான்.அவளும் சிரித்தாள்.திருமணம் முடிந்து ஸமீனாவும் நவ்ஷாதும் ஒரே ஆஸ்பத்திரியில் கடமை புரிந்தனர்.வாரத்தில் ஒரு முறை அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்து வந்தனர்.அதைப் பெரும் பாக்கியமென நினைத்தனர்.அன்று ஸமீனா அரைநாள் விடுப்பில் வீட்டுக்குப் போய் விட்டாள்.நவ்ஷாத் மாத்திரம் தனியே அகதி முகாம்களை கவனிக்கப் போனான்.அப்போது ஒரு பெண்மணி அவரைத் தொடர்ந்து வந்து "தூர...அண்மையில் நடந்த கலவரத்தில் என்னோட குடும்பத்தில் இருந்த அனைவருமே பலியாகிட்டாங்க.....நான் மட்டும் தான் மிச்சம்....நான் ரொம்ப செல்வச் செழிப்போட கொடிகட்டிப் பறந்தவ.....இப்போ ஒரு கொடி கட்டக்கூட வக்கில்லாம இருக்கிறன் தொர.....ஒங்கட முகத்தப்பார்த்தா ரொன்ப நல்லவர் போல தெரியுது.....எனக்குத் தெரியுது....எனக்குத் தனிய இந்த அகதி முகாம்ல இருக்க பிடிக்கல்ல....ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்....தயவு செஞ்சி என்னை ஒங்கட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கோ...ஒங்க வீட்டு வேலைக் காரியாக நான் கடைசி வரையில இருக்கிறன்...."நவ்ஷாத் ஒரு கணம் வீட்டு நிலைமையை யோசித்துப் பார்த்தார். ஸமீனாவுக்கு இப்போது வயிற்ருக்குள் ஆறுமாதம்;கஷ்டப்பட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது.அவளுக்கு துணையாக இருக்கட்டுமே என்று அந்த பெண்மணியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்.காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்மணியைக் கண்டதும் ஸமீனா திகைத்துப் போய் நின்றாள்.எப்போதோ கண்ட அறிமுகமான முகம்;தான் பத்து வயதாக இருக்கும் போது வள்..வள்....என்று தன்மீது எரிந்து விழுந்த அந்த முகத்தை இலேசில் மறக்க முடியுமா என்ன? சற்றே கண்ணயர்ந்து தூங்கிவிட்டால் போதும் அப்படியே ஒரு வாளித் தண்ணீரை முகத்தில் அடித்து"அடியேய்.....தருதல பிடிச்சவளே....தண்டச் சோறு தின்னவா இங்கு நிக்குறே.....எழும்புடி மூதேவி...."என்று எரிமலையைக் கக்கிய அந்தப் பிசாசு முகத்தை மறக்கவா முடியும்...?அது தான் மனத்திரையில் எப்போதோ பதிந்து விட்ட முகப்படமாச்சே..."நீங்க...நீங்க...நஸூஹா மாமி தானே...."ஸமீனாவின் வைச் சொல் தடுமாறியது.அந்தப் பெண்மணி அதிர்ந்து போனாள்.நன்றாய் வளர்ந்து தங்க விக்கிரகம் போல தள தள வென்று இருந்த ஸமீனாவை அவளால் அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை."மாமி....மாமி...என்னைத் தெரியலியா...நான்...நான்...ஸமீனா...."அந்தப் பெண்மணி அப்படியே ஓடிவந்து ஸமீனாவைக் கட்டிக் கொண்டாள்.அவள் உடல் குலுங்க,கைகள் வெடவெடத்தன,நாத் தழுதழுத்தது."ஸமீனா.....என்னை மன்னிச்சிடுங்க.....மன்னிச்சிடுங்க மக.....நான் ஒங்க குடும்பத்துக்கு எவ்வளவோ துரோகம் செஞ்சன்....உங்க பிஞ்சு மனச புரியாமல் நஞ்சுத் தனமாக நடந்துகிட்டன்.....அந்த அநியாயம் தான் இப்போ அனுபவிக்கிறன்....உங்கள எல்லாம் அகதிகளைப் போல விரட்டினன்.....அல்லாஹ் இப்போ என்னையே அகதியாகிட்டான்....என்னை மன்னிச்சிடுங்க...."ஸமீனாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.ஸமீனாவுக்கும் கண்கள் புடைந்தன.அந்தக் காட்சியை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் டொக்டர் நவ்ஷாத்....
ஸமீனாவையும் தந்தையையும் வீட்டை விட்டே துரத்தி விட்டாள் நஸூஹா.அங்கிருந்து வெளியேறிய ஸமீனாவின் தந்தை நிஸாம் ஹாஜியாரின் பக்கத்து வீட்டிற்கு வந்து குடியேறினர்.ஸமீனாவின் மழலைப் பேச்சு குழந்தை இல்லாத அவர்களைக் கிறங்கச் செய்தது.ஸமீனாவின் அதிக பொழுது நிஸாம் ஹாஜியார் வீட்டிலேயே கழிந்தது.மிக சீக்கரத்திலேயே இரு குடும்பமும் நெருக்கமாகிவிட்டன.ஸமீனா உயர்தரப் பரீட்சை எல்லாம் முடிந்து கவலைகளை மறைந்திருந்த போது தான் தந்தையின் திடீர் மறைவு அவளை இடியாகத் தாக்க,ஆடிக்காற்றில் சிக்குண்ட துரும்பாய் மாறினாள்.நல்ல காலம் - திசை தெரியாது தவித்த அந்தத் துரும்பை நிஸாம் ஹாஜியாரும் - மனைவியும் பொறுப்பேற்று விட்டார்கள்.க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் பாடசாலை அறிவுப் பலகையில் தொங்கின.ஸமீனா விஞ்ஞானத் துறையில் மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தாள்.நாட்காட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக